Tuesday, February 14, 2012
aarokkiya samayal.new2
செட்டி நாட்டில் மிகவும் பிரசித்தமான கவுன் அரிசியை பல விதமாக சமைக்கலாம். சிவனுக்கு ப்ரீதியான பிரதோஷ தினத்தன்றுகார அரிசியைஊறவைத்து வெல்லம் சேர்த்து நந்தி பகவானுக்கு நிவேதனம் செய்தால் மிகவும் நல்லது என்று கூறுவார்கள்
aarokkiya samayal.new
அன்புள்ள வாசகர்களுக்கு.. வணக்கம்
நம் உணவில் நார்ச்சத்து நிரம்பியதும் செய்வதற்க்கு எளிதுமான ஒரு சமையல் குறிப்பை எழுது கிறேன் . இதை செய்த்தெரிந்தவர்கள் அதிகம் இருப்பார்கள்.. இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்துகொளவார்கள்
கவுன் அரிசி அல்லதுகார அரிசி என்ற இந்த அரிசி மிகவும் நார்ச்சத்து நிரம்பியது.இதை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை தரும்
ஒரு கப் கார அரிசியை வாணலியில் வாசனை வரும் அளவு வறுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இதில் தேவையான அளவு சுடு தண்ணீர் தெளித்து. உதிர் உதிராக பிசறி ஆவியில் வைத்து வேகவிடவும். பின்னர் இத்துடன் உதரத்த வெல்லம் ஏலப்பொடி சேர்த்து பிசறி இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி வறுத்து போடவும்.சிறிது தேங்காய்ப்பூ சேர்க்கவும் ருசியான கார அரிசி புட்டு தயார்
வளரும்
Subscribe to:
Posts (Atom)