Saturday, August 25, 2012
aarokkiya samayal
ஆரோக்கிய சமையல்
ஒரு ஸ்பூன் நெய் கூட சேர்க்காத சத்து மிகுந்த சோளமாவு அல்வா
இந்த அல்வாவை செய்வதும் மிகவும் சுலபம் விரைவில் செய்துவிடலாம்
அல்வாவிற்கு தேவையான சாமான்கள்
ஒரு கப் சோளமாவு { corn flour}
இரண்டு கப் சர்க்கரை
மூன்று கப் தண்ணீர்
இரண்டு ஸ்பூன் பாதாம் ட்ரின்க் பவுடர்
கால் ஸ்பூன் பைன் ஆப்பிள்எசன்ஸ்
செய்முறை
தண்ணீர் ,சோளமாவு, சர்க்கரை, பாதாம் ட்ரின்க் பவுடர் எல்லாவற்றையும் ஒன்றாக வாணலியில் போட்டு அடுப்பில் ஏற்றி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும் .மாவு நன்றாக வெந்ததும் கெட்டியான பின்பு ஒரு டிரேயில் கொட்டி சமப்படுத்தி சிறிது ஆறியபின்பு துண்டுகள் போடவும். சுவையான ஆரோக்கியமான அல்வா தயார்
Monday, August 20, 2012
arumyyaanasamaiyal kurippukal...2
கிருஷ்ணஜியுடன் நாற்பதாண்டுகள் ........என்ற புத்தகத்திலிருந்து ..
பாலடைப்ப்ரதமன் /;
பாலடப்பிரதமன் இரண்டு வகை ஒன்று அடை பிரதமன் ,தேங்காய்ப்பால் வெல்லம் போட்டு செய்வது ..மற்றொன்று பசும்பால், சர்க்கரைபோட்டு பால் பாயசம் போல் செய்வார்கள் அரிசியில் அடை தயாரித்து செய்வார்கள் இந்த அடை தயாரிக்கும் முறைதான் முக்கியம் .அடைபிரதமனுக்கு அடை தயாரிக்க நல்ல பச்சரிசி ஒரு கிலோ ஊறவைத்து வடிகட்டி உலர வைத்து நைசாக மாவாக்க வேண்டும் இந்த மாவுக்கு ஒரு கப் மாவு தண்ணீர் மூன்று கப் ஒரு ஸ்பூன் நெய் என்று கலந்து வைத்துக்கொள்ளவேண்டும் வாழை இலையை டிபன் இலை போல சிறிதாக அறிந்து கொண்டு தயார் செய்யவும். இட்லிப்பாத்திரத்தில் நீர் விட்டு கொதி வந்ததும் வாழை இலையில் இலை வடகம் போல் நைசாக எழுதி பாய் போல் சுற்றிக்கொள்க இட்லிதட்டில் ஒவ்வொன்றாக வைக்கவும் மூடி வைத்து பத்து நிமிடம் வேகவிடவும் பிறகு இறக்கி இலையில் இருக்கும் அடையைஒரு பாத்திரத்தில் மாற்றி நைசாக வில்லையாக வெட்டிக்கொள்ளவும் பாலடைப்பிரதமனுக்கு இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுண்ட வைக்கவும் சுண்டி வந்ததும் 250 கிராம் சர்க்கரை போட்டு கொதி வந்ததும் பாலின் அளவிற்கு கால் பாகம் கணக்காக வெட்டி வைத்திருக்கும் அடையையும் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும் ஏலப்பொடி ஒரு ஸ்பூன் போட்டு இறக்கவும் பால் மணத்துடன் வரும் இது பாசந்தியை நினைவு படுத்தும்
அடுத்து வரும் நாட்களில் வேறு ஒரு குறிப்பை பார்க்கலாம்
Friday, August 17, 2012
arumaiyaana samayal kurippukal...1
உலகப்புகழ் பெற்ற அன்னிபெசன்ட்அம்மையார் தனக்கு ச்வீகார மகனாக கண்டெடுத்துள்ள ஜே. கிருஷ்ணமூர்த்தி என்றதத்துவ ஞானியிடம் நாற்பது வருட காலம் வசித்து அவருக்குஉதவியாக இருந்த திரு பரமேஸ்வரன் அவர்கள் தான் செய்த அருமையான சமையல் குறிப்புகளை மக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் ...கிருஷ்ணாஜியுடன் நாற்பதாண்டுகள் ....என்ற புத்தகத்திலிருந்து சிலகுறிப்புகளை நான் எழுத விரும்புகிறேன் ...:வாழ்க கிருஷ்ணாஜியின் புகழ் "...சர்வமும் கிருஷ்ணாஜிக்கே சமர்ப்பணம் :என்று திரு பரமேஸ்வரன் கூறினார். நாமும் அதையே கூறி மனதார திருபரமீவரன் வாழ்க என்று வாழ்த்துவோம்...
கிருஷ்ணாஜியுடன் நாற்பதாண்டுகள் ....என்ற நூலில்லிருந்து திரு பரமேஸ்வரன் அவர்கள் திரு கிருஷ்ணஜியுடன் காஷ்மீரில் தங்கியிருந்த போது காஷ்மீர் ராஜகுடும்பத்திற்கு அளித்த விருந்தில் ஒரு முக்கிய அயிட்டமான ராஜா ச்வீட்டைப்ப்றிய குறிப்பு.
ஆப்பிள் அல்வா தேவையானவை
புளிப்பில்லாத ஆப்பிள்கள்
சர்க்கரை 300 கிராம் ...நெய் 100 கிராம் பாதாம் பருப்பு 50 கிராம் பிஸ்தா 50 கிராம் ஏலப்பொடி அரை ஸ்பூன் குங்குமப்பூ சிறிது
பாதாம். பிஸ்தா இவற்றை ஊறவைத்து தோல்நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும் ஆப்பிள்களை தோல்நீக்கி துருவி வைத்துக்கொள்ள வேண்டும்
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் சிறிது நீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும்
பாகு நூல் பதம் வந்ததும் துருவு வைத்துள்ள ஆப்பிளையும் நெய்யையும் ஒன்ராகப்போட்டு கிளறவும். கொதி வந்ததும் அட்ப்பை நிதானமாக எரியவிடவும் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும் அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்தில் இறக்கி ஏலப்பொடி குங்கமப்பூ போட்டுக்கிளறி ஒரு அழகான பாத்தித்தில் மாற்றிக்கொள்ளவும் பின்னர் பாதம் பிஸ்தா பொடியாக நறுக்கி அல்வாவின் மேல் தூவி அலங்கரிக்கவும் நன்கு ஆறியபின்னர் துண்டுகள் போடலாம். இந்த அல்வா உடம்புக்கு மிகவும் நல்லது.
இனி வரும் நாட்களில் வேறொரு குறிப்பை காணலாம்
Subscribe to:
Posts (Atom)