Tuesday, January 18, 2011

thiyanamum arokiya unavum{7}

5.நெல்லி ஜாமூன் ...கோலா ஜாமூன் 
மனதிற்கு மருந்தாகும் மலர்ந்த மலர்கள் தந்திடும் தேன் நமது உடலுக்கு நல்ல மருந்தாகும். 
ஐந்து நபர்களுக்கு ....தேவையான பொருட்கள் :
பெரிய முழு நெல்லி .....50
தேன் .............................1.50..கிலோ 
பனங் கற்கண்டு .........500 கிராம் 
செய்முறை:-
பெரிய முழு நெல்லியை கழுவிவிடவும். பின் நல்ல துருப்பிடிக்காத ஊசியால்  நெல்லயில் சிறு சிறு துளைகளை நெல்லி முழுவதும் செய்து கண்ணாடிப்பாட்டிலில் தேனை ஊற்றி அதில் துளையிட்ட நெல்லிகளை ஊறவிடவும். கண்ணாடி பாட்டிலின் மேல் பகுதியில் மெல்லிய பருத்தி துணியை கட்டி வெய்யிலில் ஒரு வாரம் வரை புடம் போடலாம். சிலர் நெல்லிகளை முதலில் ஆவியில் காட்டியபின் ஊசியால் நெல்லிகளைக்குத்தி பின் அதை தேனில் ஊறவிடுவர். நன்றாகத்தேனில் ஊறினால் இதுவே மிகவும் சத்து மிகுந்த நெல்லி ஜாமூன்-கோலாஜாமூன் எனப்படும்.மிகச்சிறந்த உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட விரும்புவர் விசேஷ வைபவங்களில் விருந்தினர் விருந்தோம்பலில் வழங்கி அன்பர்களை அசத்தி விடலாம். ஆரோக்கியத்தின் அஸ்திவார உணவு. 
பயன்கள்:
நெல்லி சிப்சின் பலன்கள் அனைத்தும் கிட்டும். நீரிழிவு ,கிளைக்கோமா அன்பர்களும் தொடர்ந்து சாப்பிட பயன் பெறுவார். . டயரியா விலகும் ,   டிசன்ட்ரிவயிற்றுவலி ஜீரணமின்மைசக்தியின்மை மறையும். தினம் சாப்பிட்டால் அண்ணன்  தம்பியாகும் அளவில் முதுமை மறைந்து இளமை ஊஞ்சலாடும் உயர் இரத்த அழுத்தம் ,ஒபெசிட்டி அதிக கொலஸ்ட்ரால் அதிக எடை குறையும் பசிடின்மை நீங்கி சாப்பிடும் உணவுச்சத்துக்கள் உடலில் கிரகிக்கப்பட்டு பலம் மிகும் தாது விருத்தியாகும். சளி, இருமல். தலை வலி விலகி கண்பார்வை மேம்படும். கண்ணிற்கு கண்ணாடி அணிந்த அன்பர்கள் தினமும் அவசியம் சாப்பிட வேண்டும். குழந்தை பாக்கியம் வேண்டிய அன்பர்கள் தினமும் நெல்லி ஜாமூன் சாப்பிட்டு குழந்தை பெறலாம். 
தினம் ஒரு நெல்லி ஜாமூனால்  அண்ணன் தம்பியாகி அழகு இளமை பெற்றிடலாம். 
குறிப்பு:
முளைத்த உளுந்து நோஞ்சானை பலசாலியாக்கும்.கர்ப்பப்பை கோளாறு கல்லீரல் பிணிகள் விரட்டும். 
வளரும்.   

Wednesday, January 12, 2011

thiyanamum arokiya unavum {6}

4.முள்ளங்கி  ஊறுகாய் :
ஐந்து நபர்களுக்கு ......... தேவையான பொருள்கள் 
வெள்ளை முள்ளங்கி ......300  கிராம் 
அல்லது சிவப்பு முள்ளங்கி300.கிராம் 
இஞ்சி ...................................100..கிராம் 
எலுமிச்சை .........................5
இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் ......சிறிது 
தயாரிப்பு முறை :
முள்ளங்கியை கழுவி காரட் திருகல் போல் சீவலாம் அல்லது தீக்குச்சி வடிவில் நறுக்கலாம் இஞ்சியைத்தோல் சீவி வெட்டிசசாறு எடுக்கவும்.எலுமிச்சையை கொட்டை நீக்கி சாறு எடுக்கவும். இஞ்சிச்சாறு  . எலுமிச்சை சாறு கலந்து அதில் நறுக்கிய முள்ளங்கியை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும் தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் கலக்கவும் தேவையெனில் மிளகுத்தூள் சேர்க்கலாம் 
பயன்கள்:
மலச்சிக்கல் தீரும். நீரிழிவு அன்பர்களும் அருமையாக சாப்பிடலாம். அடுப்பில் சமைக்காத எண்னை இல்லாத ஊறுகாய்.உயர் இரத்த அழுத்தம் ,அதிக கொலஸ்ட்ரால் அன்பர்களுக்கு அவசியமான ஊறுகாய். அஜீரணம், பசியின்மை அன்பர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். சிருநீறகப்பிணிகள் மறையும்.அதிக உடல் எடை அன்பர்கள் ,தொப்பை, வாயுப் பொருமலால் அவதிப்படும் அன்பர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும். 
இஞ்சி சாறுக்கு  பதில் தயிரில் ஊறவைத்தும் செய்யலாம். இ தேபோல் நெல்லி ஊறுகாய் .மாங்காய் ஊறுகாய் போன்றவைகளையும் அடுப்பில் சமைக்காமல் எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கலாம். 
எல்லா இயற்கை அவல சாதவகைகளுடன் சேர்த்துச்சாப்பிடலாம் 
முள்ளங்கி அதிக குளிர்ச்சி தரும் உணவு. சீதள உடல் அன்பர்கள் கவனமாக பயன் படுத்த வேண்டும். சிறுநீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உள்ள அன்பர்கள் நல்ல பயன் பெறலாம். குடல் நோய் ,பல்வலி, கரப்பான் நீங்கும். மூல வியாதி ,மூலக்கடுப்பு, மூல எரிச்சலை விரைந்து நீக்கும். ஜீரணம் மேம்படும். காய் கறிகளில் மலிவானது. எனினும் மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது, 
சமைத்த மசாலை ஊறுகாய் குடல் புண்ணை அதிகரிக்கும். 
முள்ளங்கி ஊறுகாய் சிறுநீர் எரிச்சலை தீர்த்திடும்.
சோடியம் குலோரைட்டுக்கு  மாற்று பொட்டாசியம். உப்பால் உடல் கொழுத்த அன்பர்களின் அருமையான உணவு வெள்ளரியே. *
வளரும் 

Saturday, January 8, 2011

thiyanamum arokiyaunavum[5]

இரத்தின சக்திவேல் 
------------------------------
3 .பீட்ரூட் ஊறுகாய் 
ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள் 
பீட்ரூட் ----250 கிராம் 
இஞ்சி ----100  கிராம் 
எலுமிச்சை ௧௦
இந்துப்பு ----சிறிது 
தயாரிப்பு :
பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி காரட் திருவியில்  நைசாகச்ச்சீவ வேண்டும்  ஈஞ்சியை தோல் சீவிவெட்டிசசாறு எடுக்கவும் மிகக்குறைந்த நீர் சேர்க்கலாம் எலுமிச்சையை கோட்டை நீக்கி சாறு எடுக்கவும் இஞ்சிசாறு,எலுமிச்சை சாறு இவைகளைக்கலந்து அவற்றில் சீவிய பீட் ரூட்டை பத்து நிமிடம் ஊறவைக்கவும் தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் சேர்க்கலாம். சுவையான பீட்ரூட் ஊறுகாய் சாப்பிட ரெடி இது அடுப்பில் சமைக்காத ருசியான ஊறுகாய். இயற்கை மருத்துவ முகாமில் அனைவரும் பிரியமாக சாப்பிடும் உணவு. மூன்றில் ஒரு பங்கு காரட் சேர்த்தும் இவ்வூருகாய் தயாரிக்கலாம் 
பயன்கள் :
நீரிழிவு அன்பர்கள் உட்பட அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு.உயர் இரத்த அழுத்தம் .அமிலத்தன்மை மலச்சிக்கல், பசியின்மை ,தொப்பை குறைக்கும் உணவு ,ஜீரணக்கோளாறு வயிற்றுவலி வாயுப்போருமல் கொலஸ்ட்ரால்,குறைக்கும் உன்னத உணவு. பயமில்லாமல் தினமும் அளவாக சாப்பிடலாம்.
இயற்கை தயிர் அவள் சாதங்களுடன் இணைத்துச்சாப்பிடலாம் பீட்ரூட்டை ஜெர்மனியில் ஜூஸாக எல்லாரும் அடிக்கடி அருந்தும் பானமாக விற்பனை செய்கின்றனர்  கான்சரை குணப்படுத்தும் உணவுகளில் பீட் ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தின் தன்மையை மேம்படுத்தும் குணம் பீட்ரூட்டிற்கு உள்ளது  ஒரு சிலருக்கு இது செரிப்பதற்கு கொஞ்சம் கடினமாகவும் இருக்கும் 
பீட்ரூட் 2000 வருடங்களுக்கு முன்னேயே உணவாக பயன் படுத்தப்படுகிறது .உடலின் தேவையற்ற இரத்த சூட்டை சரி செய்யும் உணவு .இதில் உள்ள பீட்டின்வயிறு  குடல் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மையாக உள்ளன .இதி நல்ல சர்க்கரை சத்து உள்ளதால் உடலுக்கு உடனடி தெம்பு தரும். காரட்டுடன் பீட்ரூட்டையும் ஜோசுடன் கலந்து சாப்பிட்டு நோஞ்சான் அன்பர்கள் நல்ல  புஷ்டி பெறலாம் இந்தியர்களை விட வெளிநாட்டினர் தை அதிக அளவில் பயன் படுத்தி பயன் பெறுகின்றனர் .உடல் எடை அதிகம் வேண்டியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு நல்ல வனப்பை பெறலாம் .மாலைக்கண் ,கண்ணாடி அணிந்த அன்பர்கள் தொடர்ந்து சாப்பிட்டு நலம் பெறலாம். கண் குளிர்ச்சியும் கிட்டும். நீடித்த உடல் உல் புண்களை ஆற்றும். மஞ்சள் காமாலை கண்டவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம். ஹீமொக்குலோபின் குறைந்தவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம். ஹீமொக்குலோபின் அளவை கூட்டும் அருமையான உணவு. முகப்பொழிவைவளமாக்கும் ஊறுகாய் பீட்ரூட் ஊறுகாய். 
 சமைத்த ஊறுகாய் குடலை ஊரு படுத்தும்
இயற்கை ஊறுகாய் குடலை குணப்படுத்தும் 
வளரும் .

Friday, January 7, 2011

thiyanamum aarokiyaunavum

இரத்தினசக்திவேல் 
-----------------------------
2.  நெல்லிக்கனி சிப்ஸ் ,வற்றல் 
தேவையான பொருட்கள் :
நாட்டு நெல்லிக்கனி -100
தயாரிப்பு முறை :
 பொதுவாக நெல்லிக்கனி  மழைக்காலங்களில் கிடைப்பதால்  வெட்டி சமைத்து ஊறுகாய் போடுகிறோம் அதில் சத்துக்கள் அழிகின்றன. அதற்குப்பதில் சிப்ஸ் அல்லது வற்றல் செய்யலாம்.இம்முறையில் வருடம் முழுவதும் பயன் படுத்தலாம் சளித்தொல்லையும் இராது. 
நன்றாக முற்றிய முழு நெல்லிக்கனிகளை கழுவிச் சிறு சிறு துண்டுகளாக சீவலாம். கொட்டை நீக்கி விடவும்.  பின் வெள்ளைத்துணியில் விரித்து நன்றாக வெய்யிலில் காய வைக்கவும் நன்றாக உலர்ந்தவுடன் கார்றுப்புகாமல் பத்திரப்படுத்தவும். இதுவே நெல்லி சிப்ஸ். உப்பு மிளகாய் ஏதும் சேர்க்கக் கூடாது. வேக வைக்கக்கூடாது. வெய்யிலில் காய வைப்பதால் நெல்லியின் விட்டமின் c  குறையாத தன்மையில் உள்ளது. 
பயன்கள்:
தேவையான போது  ஒன்று இரண்டு வாயில் போட்டு சுவைத்துப்பின் தண்ணீர் குடிக்கலாம் மிகச்சுவையாக இருக்கும் இனிக்கும் சிறிது சிப்சை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து துவையல் செய்யலாம் இரவில் ஊறவைத்துகாலையில் நெல்லி பானமாகவும் குடிக்கலாம் 
நீரிழிவு அன்பர்களின் அற்புதமான மருந்தும் உணவும் நெல்லி சிப்ஸ் எனலாம் பசியின்மையை ஒரே நாளில் நீக்கும் காபி,டி அன்பர்கள் பான்பராக்,புகையிலை ,சிகரட் அன்பர்கள் நெல்லியின் மூலம் நிவாரணம் பெறலாம் பயண காலங்களில் பயன் படுத்தலாம் கண்ணாடி அணிந்த அன்பர்கள் நெல்லியால் நல்ல பயன் பெறலாம். இளமை மேம்படும். மூட்டு வலி ,உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், தொப்பை அன்பர்கள் நெல்லி சிப்சின் மூலம் நல்ல நலம் பெறலாம். உடலின் அமிலத்தன்மை ,புளியேப்பம், வாயுப்போருமல் நீங்கி சிறுநீர் பிணிகள் விலகும். முடக்கு வாதம் மூல நோய் குறையும். பெண்களின் ஒரு ஒப்பற்ற மருந்து -மாதவிடாய் பிணிகள் நீங்கும். சர்வ ரோக நிவாரண உணவு.
முதியோரும் .நெல்லியும் முதலில் புளிப்பாக இருந்தாலும் பின்னாளில் வாழ்வை வளமாக்குவதில் இனிப்பாக இருக்கிறார்கள். 
நெல்லியை வெய்யிலில் உலர்த்தினாலும் அதில் உள்ள விட்டமின் குறைவதில்லை. அதில் லெனின் என்ற திரவம் உள்ளதால் விட்டமின் சிதையாமல் மேலும் கூடுகிறது. உடனடி சுத்தக்குடி நீர் தயாரிப்பில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு ஸ்பூன் நெல்லிப்போடி கலந்தால் நல்ல குடி நீர் உடனடியாக கிட்டும். தாது விருத்தத்துக்கும் ,தலை முடி டானிக்குக்கும் பயன்படுகிறது. இரவில் பயன் படுத்தக்கூடாது. நரம்புத்தளர்வு .காக்காய் வலிப்பு, உடல் மன நலக்குறைவு அன்பர்கள் தினமும் நெல்லி சிப்ஸ் அல்லது நெல்லி துவையல் சாப்பிட வேண்டும். 
பீடி, பான் பராக் அன்பர்கள் நெல்லி சிப்ஸ் ஆல் உறுதியாக மறு பிறவி எடுக்கலாம்.
valarum 

Thursday, January 6, 2011

thiyanamum aarokiyaunavum

Book referred:
------------------
சமைக்காத சத்துள்ள உணவுகள் :
இயற்கை பிரியன் இரத்தின சக்திவேல் 
கற்பகம் புத்தகாலயம் 
4/2  சுந்தரம்  தெரு{நடேசன் பூங்கா அருகில் }
 தியாகராய நகர் ,சென்னை -600017  
தொலை பேசி -24314347   
1.பழக்கலவை 
புரூட் சாலட் -புரூட் மிக்ஸ் 
--------------------------------------
 5 நபர்களுக்கு  தேவையானபொருட்கள் 
ஆப்பிள் 
 வாழைப்பழம் 
திராட்சை 
பேரீச்சை 
மாம்பழம் 
பப்பாளி 
சப்போட்டா 
ஆரஞ்சு 
மாதுளை 
 கொய்யா 
 வகைக்கு 100 கிராம் அளவில் 
தேன்  அல்லது வெல்லம்  --100 முதல் 200 கிராம் 
முந்திரி   -50   கிராம் ... ஏலக்காய்  தூள்  சிறிது  த்தேவையானால்  1/2   மூடி தேங்காய் திருகல் 
தயாரிப்பு முறை 
 ஆப்பிள் ,திராட்சை , கொய்யா , பேரீச்சை  மாம்பழம் , சப்போட்டா  போன்றவைகளை  தோல் நீக்கத்தேவையில்லை. நன்றாக கழுவி  சிறு சிறு துண்டுகளாக வெட்டி  கொட்டைகளை நீக்கவும்  மாதுளை முத்துக்களை மட்டும் எடுக்கவும்  வாழைப்பழத்தை  தோல் நீக்கி  சிறு துண்டுகளாக வெட்டவும்  ஆரஞ்சை தோல் நீக்கி  சுளைகளை உரிக்கவும்  பப்பாளியையும் தோல் சீவி  விதை நீக்கி  சிறு துன்ன்டுகளாக வெட்டி விட்டவும் 
வெட்டியா எல்லா பழங்களையும்  கலந்து  அத்துடன் தேன்  அல்லது வெல்லம் தூள் முந்திரி,ஏலக்காய் தூள் தேங்காய் திருகல்  கலந்தால் பழக்கலவை சாப்பிடத்தயார்.
பயன்கள்
ஆஸ்துமா,சளித்தொல்லை அன்பர்கள் அளவாகசாப்பிடலாம் 
நீரிழிவு அன்பர்கள் தவிர  அனைத்து அன்பர்களும் சாப்பிடலாம். உணவுக்கு முன் சாப்பிடலாம். தரித்தவுடன் சாப்பிட வேண்டும்  இரு வேளையில் மலச்சிக்கல் .குடல் புண் பசியின்மை விலகும் உடலுக்கு உடனடி சக்தி தரும்  சிறுநீர் எரிச்சல்  நீர் பிரியாமை  உடலின் மூலச்சூடு  தொப்பை ஒரு வாரத்தில் சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிரியமாக சாப்பிடும் உணவு.  பழக்கலவையை தொடர்ந்து சாப்பிட கண்பார்வை மேம்படும் மூட்டு வலி உடல் தொப்பை வாயுப்போருமல் விலகும். 

Tuesday, January 4, 2011

thiyanamum aarokiyaunavum

தியானமும் ஆரோக்கிய உணவும் 
---------------------------------------------------
எங்கள் யோகா ஆசிரியை  தனது வகுப்பின் போது கூறிய நல முத்துக்களில் சில :
எனது பேச்சு எனது மனதின் அடிப்படையில் உள்ளதாக இருக்கட்டும்.  எனது மனம் எனது பேச்சின் அடிப்படையில் உள்ளதாக இருக்கட்டும் நம்மால் முடியாதது  யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் முடியும்.
 அக மாற்றம் தேவை... புறமாற்றம் தேவையில்லை. எல்லாருடனும் விட்டுக்கொடுத்து  ஒற்றுமையுடன்  வாழ பழகவேண்டும்  அளவான ஆசை,  ஆரோக்கியமான உடல் நிலை  அன்பான வாழ்க்கை  வாழ கற்றுக்கொள்ள வேண்டும்  எது நடந்தாலும்  இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு  ஆனந்தமாக இருக்க பழக வேண்டும்  கூட்டு முயற்சியை புரிந்துகொண்டால்  எந்த காரியமும் சித்தி அடையும் மனம் பக்குவப்பட்டால்  அமைதி தானாக வந்துவிடும்  வாங்க எண்ணுவது குறைய வேண்டும்  அதிகம் கொடுக்க நினைக்க வேண்டும்  மனிதர்களை ஆராய்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும்  "தான் " என்ற அஹங்காரம்  அறவே களையப்படவேண்டும்  இன்ப துன்ப சம நோக்கு  மிகவும் அவசியம். சுய ஒளியில் பிரகாசிக்கின்ற பிரம்மாவே  என்னுள் எழுந்து அருள வேண்டும்  பேசும் மனமும்  என்னுடைய அறிவின்   அடிப்படையாலேயே  அமைந்துள்ளன  எனவே அறிவின் மீதான என் நாட்டம்  தடைப்படாமல் இருக்கச்செய்வாயாக  இரவு பகலை இதே நாட்டத்தில் செலவிடுகிறேன்  நான் உண்மையே  பேசுவேன்  என்னை பிரம்மா காக்கட்டும்  அவர் பேச்சு பலரை காக்கட்டும்  இந்த பிரார்த்தனையை காலை மாலை செய்யவும் 
ஒ... இறைவா  .. என்னை பொய்மையிலிருந்து  உண்மைக்கு இட்டுச்செல்வாயாக  என்னை இருளிலிருந்து  ஒளிக்கு இட்டுச்செல்வாயாக  என்னை மரணத்திலிருந்து அழியாமைக்கு  இட்டுச்செல்வாயாக.  ஆதித்தன் மகனான சூரியனுக்கு , எண்களின் கண்களின் ஒளியாக இருக்கும் சூரியனுக்கு  வணக்கம்.  இவ்வுலகை ஆளுகின்ற  சூரியனுக்கு   நாங்கள் எங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அற்பணிக்கின்றோம் 
தேவைகள் குறைந்தால்  தேடுதல் இல்லை. இரககம் உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார் விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை  உன் எதிரில் இல்லாதவனைப்பற்றியும் இறந்துபோன்வனைப்பற்றியும்  பேசாதே.   பண் பட்ட நிலத்தில் பயிர் விளையும்  பண்பட்டஉள்ளத்தில்  அருள் விளையும்  எல்லா உயிர்களும்   விரும்புவது  பாதுகாப்பும் அன்பும் அரவணைப்பும்.   வெறுப்பவனை உயிர்கள்  வெறுக்கும்   விரும்புபவனை உயிர்கள்  விரும்பும்  
கோபம் என்ற உணர்வு  நமது உடல் நிலைக்கு மிகவும் கேடு விளைவிக்கும்  இரத்தகொதிப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு உண்டு  எதிராளிகள் துன்பம் தரும் சொற்களை கூறினால்  அவற்றை நாம் பொருட்படுத்தக்கூடாது  ஒரு பொருளை ஒருவரிடமிருந்து  வாங்காது போனால்  அது அவர் கையில்தானே இருக்கும்  அதே போன்று வசைசொற்கள்  நம்மைத்தாக்கி துன்புறுத்தாது அவரிடமே தங்கி விடும்  துன்பம் தரும் நிகழ்வுகளை  அப்போதே மறந்து விட வேண்டும்  அதை அசை போட்டுக்கொண்டு  நம்மை நாமே துன்புறுத்தி க்கொள்ளக்கூடாது  நமக்கு நிகழும் துன்ப நிகழ்வு  நம் கர்ம வினையால் வந்தவை அதற்கு யாரும் காரணமல்ல. என்று உணர வேண்டும்  நம் மனதின் எண்ணம்  களில் தான்  சந்தோஷம் உள்ளது  வெளிப்பொருட்களில் அல்ல.வலது பக்க மூளை  உணர்சிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே  உணசிகளை கட்டுப்படுத்த நாம் பழக வேண்டும்  அப்போதுதான் வாழ்க்கை அமைதியாக  இருக்கும்  பல முறை நம் விருப்பங்கள் நிறைவேறாது போனால் நமக்கு எரிச்சலும் கோபமும் வருகிறது. விருப்பம்தான் இதற்கு காரணம்  தேவைகள் குறை குறைய துன்பமும் குறையும்.   இன்பமும் அமைதியும் தோன்ற ஆரம்பிக்கும்.  மகான்களின்  தரிசனம் கிடைக்க கிடைக்க  உணசிகள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பிக்கும். இடது பக்க மூளை பேசுவதற்கு காரணமாக அமைகிறது. நாம் உணர்ச்சிவசப்பட்டால்  அதிகமாக குளுகோஸ் செலவாகிறது  இதயத்திற்குபோகவேண்டிய இரத்தம்  முகம் கண் எல்லா இடங்களுக்கும் போவதால்  விலை மதிக்க முடியாத பிராண சக்தி  அதிகம் செலவாகிறது. எனவே உணர்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்  மூச்சை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். நாம் சந்திஷமாக இருக்க வேண்டும் என்றால் பிறரிடம் குறைகளை காணக்கூடாது. நமைப்ப்றியே எண்ணுவதை விட்டு விட்டு இறைவனைப்ப்றியே எண்ண வேண்டும்   
எண்ணங்களின் வலிமை 
 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  எண்ண அலைகள் இருக்கும்  எதிமறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் அதிகம் பழகவேண்டாம்  சித்தர்கள் மூலம்  எண்ணங்கள் மேலோங்கும்  தியானத்தின் மூலம் எண்ண ஓட்டம்  கட்டுப்பட்டு  மன அழுத்தம்  குறைந்து அமைதி ஏற்படும் 
 எங்கள் ஆசிரியை  பல புத்தகங்களிலிருந்தும் பல மகான்களிடமிருந்தும் அறிந்த உணவு முறைகளைப்பற்றி  இனி வரும் பகுதிகளில் எழுத விரும்புகிறேன்.
வளரும் 

Monday, January 3, 2011

thiyanamum aarokiya unavum

சுவாமியின் பொர்பாதங்களுக்கு  என் பணிவு நிறைந்த நமஸ்காரங்களை அற்பநித்துவிட்டு இக்கட்டுரையை தொடங்குகிறேன் 
 ஆரோக்கிய வாழ்விற்கு தியானமும் யோகாவும் உணவுப்பழக்கங்களும்  மிகவும் அவசியமானதாகும் 
 இதை எங்களுக்கு கற்றுக்கொடுத்த யோகா ஆசிரியையை  எங்களால் என்றைக்குமே மறக்க முடியாது. அவர்களைப்பற்றி எண்ணும்போதேமனதுக்கு மிகவும் இனிமையாகவும்  அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. அவர் செல்வச்சிறப்பு மிக்க நல்ல குடும்பத்தில் பிறந்து அதே போன்று செல்வச்சிறப்பு மிக்க குடும்பத்தில் திருமணம்  செய்து கொண்டு முத்துப்போல் இரண்டு  குழந்தைகளைப்பெற்று இனிமையான  வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் அவர் மனம் திருப்தி  அடைய வில்லை.  எப்போதும் ஆன்மீகத்திலேயே சுழன்று கொண்டிருந்தது  எனவே பல யோகிகளையும்  மகான்களையும் சந்தித்து  அவர்களிடமிருந்து  ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம்மான  ஆன்மீக கருத்துக்களையும் உணவு முறைகளையும்  கற்றுக்கொண்டு  வந்தார். மேலும் பெரிய யோக மைய்யத்திற்கும் சென்று  யோகா பயின்று வந்தார்.  தான் கற்று வந்தவைகளை  மற்றவர்களுக்கும்  கற்றுக்கொடுக்கவேண்டும்  என்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். தாம்  கற்று வந்த நல்ல விஷயங்களை   பல மக்களுக்கும் போயச்சேர்க்கவேண்டும்
என்று அடிகடி கூறுவார்  எனவே ஒரு யோகா மைய்யத்தை  உருவாக்கி  பல மக்களுக்கு  யோகப்பயிற்சி. ஆண்மீககருத்துக்கள்  உணவு முறைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்.  அவர் நீண்டநாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து பல மக்களும் நன்மை பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தோம்.  ஆனால் எல்லாருக்கும் பிடித்த எங்கள் யோகா ஆசிரியையை இறைவனுக்கும் மிகவும் பிடித்துவிட்டது போலும்  தன வாழ்நாளின் இலட்சியமான கைலாச யாத்திரையின்  முடிவில் இறைவன் அவர்களை  தன்னிடம் அழைத்துக்கொண்டார். தம் இல்லத்திலிருந்து கைலாச யாத்திறைக்குப்புறப்பட்ட அவர் வீடு திரும்பாமலே கைலாசம் சென்றடைந்துவிட்டார்.  இதை அறிந்த எங்கள் எல்லாருடைய மனமும் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாகியது.  
தினமும் காலையில் யோகா செய்யும்போது  அவர்கள் எங்கள் எதிரில் அமர்ந்து யோகா சொல்லிக்கொடுத்த காட்சியே மனக்கண்முன் தோன்றி மனம் மிகவும் வேதனையில் வலிக்கிறது. இருப்பினும் ஆன்மீகச்சூழளிலேயே சொர்க்கம்  அடைத்த அந்த  உயர்ந்த ஆத்மாவிற்கு தினமும் அஞ்சலி  செலுத்துகிறோம் .
 அவர் மற்றபெண்களைப்போல   நகைகள் புடவைகள் முதலியவற்றில் அதிகம் ஆர்வம் காட்டமாட்டார்  எப்போதும் மிகவும் எளிமையாகவே உடை உடுத்துவார். நகைகளும் அதிகம் அணியமாட்டார்.  அவர் பேசும் பேச்சுக்கள் எப்போதும் யோகாவைப்பற்றியும்  தியானத்தைப்பற்றியுமே இருக்கும் 
 இவர் எல்லாரிடத்திலும் மிகவும் பாசத்துடன் பழகுவார் பேச்சும் மிகவும் பணிவாகவும் மென்மையாகவும் இருக்கும். எனக்கு வகுப்பு முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் அடிக்கடி கூறுவார்... நான் கர்ருக்கொண்டவைகளை  இன்னும் அதிக மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் 
இதனால் அதிக மக்கள் பயன் பெற வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். நான் அவர்களிடம் அறிந்த சில செய்திகளை மின்னஞ்சலில்  எழுதலாமா  என்றுகேட்டதற்கு  தாரளமாக எழுதுங்கள்  என்னுடைய நோக்கமே அதிகம்பேர்  பயனடைய வேண்டும் என்பதே என்று கூறுவார் நானும் நிறைய புத்தகங்களைப்படித்தும் மகான்களிடம் சென்றும  அறிந்த விஷ யன்களைப் பற்றித்தானே உங்களிடம் கூறுகிறேன்  என்று   கூறுவார்  நீங்கள் எழுதுவதி எனக்கு மிகவும் சந்தோஷம்  என்றும் கூறினார் . ஆனால் அவர் இருக்கும்போது  எழுதும் சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை  எனவே இக்கட்டுரையை  அந்த உயர்ந்த ஆன்மாவிற்கு kaanikk

thiyanamum aarokkiyavaazhvum

ஆரோக்கியவாழ்விற்கு தியானமும் யோகாவும் உணவுப்பழக்கங்களும் மிகவும் அவசியம்