Tuesday, January 4, 2011

thiyanamum aarokiyaunavum

தியானமும் ஆரோக்கிய உணவும் 
---------------------------------------------------
எங்கள் யோகா ஆசிரியை  தனது வகுப்பின் போது கூறிய நல முத்துக்களில் சில :
எனது பேச்சு எனது மனதின் அடிப்படையில் உள்ளதாக இருக்கட்டும்.  எனது மனம் எனது பேச்சின் அடிப்படையில் உள்ளதாக இருக்கட்டும் நம்மால் முடியாதது  யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் முடியும்.
 அக மாற்றம் தேவை... புறமாற்றம் தேவையில்லை. எல்லாருடனும் விட்டுக்கொடுத்து  ஒற்றுமையுடன்  வாழ பழகவேண்டும்  அளவான ஆசை,  ஆரோக்கியமான உடல் நிலை  அன்பான வாழ்க்கை  வாழ கற்றுக்கொள்ள வேண்டும்  எது நடந்தாலும்  இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு  ஆனந்தமாக இருக்க பழக வேண்டும்  கூட்டு முயற்சியை புரிந்துகொண்டால்  எந்த காரியமும் சித்தி அடையும் மனம் பக்குவப்பட்டால்  அமைதி தானாக வந்துவிடும்  வாங்க எண்ணுவது குறைய வேண்டும்  அதிகம் கொடுக்க நினைக்க வேண்டும்  மனிதர்களை ஆராய்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும்  "தான் " என்ற அஹங்காரம்  அறவே களையப்படவேண்டும்  இன்ப துன்ப சம நோக்கு  மிகவும் அவசியம். சுய ஒளியில் பிரகாசிக்கின்ற பிரம்மாவே  என்னுள் எழுந்து அருள வேண்டும்  பேசும் மனமும்  என்னுடைய அறிவின்   அடிப்படையாலேயே  அமைந்துள்ளன  எனவே அறிவின் மீதான என் நாட்டம்  தடைப்படாமல் இருக்கச்செய்வாயாக  இரவு பகலை இதே நாட்டத்தில் செலவிடுகிறேன்  நான் உண்மையே  பேசுவேன்  என்னை பிரம்மா காக்கட்டும்  அவர் பேச்சு பலரை காக்கட்டும்  இந்த பிரார்த்தனையை காலை மாலை செய்யவும் 
ஒ... இறைவா  .. என்னை பொய்மையிலிருந்து  உண்மைக்கு இட்டுச்செல்வாயாக  என்னை இருளிலிருந்து  ஒளிக்கு இட்டுச்செல்வாயாக  என்னை மரணத்திலிருந்து அழியாமைக்கு  இட்டுச்செல்வாயாக.  ஆதித்தன் மகனான சூரியனுக்கு , எண்களின் கண்களின் ஒளியாக இருக்கும் சூரியனுக்கு  வணக்கம்.  இவ்வுலகை ஆளுகின்ற  சூரியனுக்கு   நாங்கள் எங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அற்பணிக்கின்றோம் 
தேவைகள் குறைந்தால்  தேடுதல் இல்லை. இரககம் உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார் விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை  உன் எதிரில் இல்லாதவனைப்பற்றியும் இறந்துபோன்வனைப்பற்றியும்  பேசாதே.   பண் பட்ட நிலத்தில் பயிர் விளையும்  பண்பட்டஉள்ளத்தில்  அருள் விளையும்  எல்லா உயிர்களும்   விரும்புவது  பாதுகாப்பும் அன்பும் அரவணைப்பும்.   வெறுப்பவனை உயிர்கள்  வெறுக்கும்   விரும்புபவனை உயிர்கள்  விரும்பும்  
கோபம் என்ற உணர்வு  நமது உடல் நிலைக்கு மிகவும் கேடு விளைவிக்கும்  இரத்தகொதிப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்பு உண்டு  எதிராளிகள் துன்பம் தரும் சொற்களை கூறினால்  அவற்றை நாம் பொருட்படுத்தக்கூடாது  ஒரு பொருளை ஒருவரிடமிருந்து  வாங்காது போனால்  அது அவர் கையில்தானே இருக்கும்  அதே போன்று வசைசொற்கள்  நம்மைத்தாக்கி துன்புறுத்தாது அவரிடமே தங்கி விடும்  துன்பம் தரும் நிகழ்வுகளை  அப்போதே மறந்து விட வேண்டும்  அதை அசை போட்டுக்கொண்டு  நம்மை நாமே துன்புறுத்தி க்கொள்ளக்கூடாது  நமக்கு நிகழும் துன்ப நிகழ்வு  நம் கர்ம வினையால் வந்தவை அதற்கு யாரும் காரணமல்ல. என்று உணர வேண்டும்  நம் மனதின் எண்ணம்  களில் தான்  சந்தோஷம் உள்ளது  வெளிப்பொருட்களில் அல்ல.வலது பக்க மூளை  உணர்சிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே  உணசிகளை கட்டுப்படுத்த நாம் பழக வேண்டும்  அப்போதுதான் வாழ்க்கை அமைதியாக  இருக்கும்  பல முறை நம் விருப்பங்கள் நிறைவேறாது போனால் நமக்கு எரிச்சலும் கோபமும் வருகிறது. விருப்பம்தான் இதற்கு காரணம்  தேவைகள் குறை குறைய துன்பமும் குறையும்.   இன்பமும் அமைதியும் தோன்ற ஆரம்பிக்கும்.  மகான்களின்  தரிசனம் கிடைக்க கிடைக்க  உணசிகள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பிக்கும். இடது பக்க மூளை பேசுவதற்கு காரணமாக அமைகிறது. நாம் உணர்ச்சிவசப்பட்டால்  அதிகமாக குளுகோஸ் செலவாகிறது  இதயத்திற்குபோகவேண்டிய இரத்தம்  முகம் கண் எல்லா இடங்களுக்கும் போவதால்  விலை மதிக்க முடியாத பிராண சக்தி  அதிகம் செலவாகிறது. எனவே உணர்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்  மூச்சை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். நாம் சந்திஷமாக இருக்க வேண்டும் என்றால் பிறரிடம் குறைகளை காணக்கூடாது. நமைப்ப்றியே எண்ணுவதை விட்டு விட்டு இறைவனைப்ப்றியே எண்ண வேண்டும்   
எண்ணங்களின் வலிமை 
 ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  எண்ண அலைகள் இருக்கும்  எதிமறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் அதிகம் பழகவேண்டாம்  சித்தர்கள் மூலம்  எண்ணங்கள் மேலோங்கும்  தியானத்தின் மூலம் எண்ண ஓட்டம்  கட்டுப்பட்டு  மன அழுத்தம்  குறைந்து அமைதி ஏற்படும் 
 எங்கள் ஆசிரியை  பல புத்தகங்களிலிருந்தும் பல மகான்களிடமிருந்தும் அறிந்த உணவு முறைகளைப்பற்றி  இனி வரும் பகுதிகளில் எழுத விரும்புகிறேன்.
வளரும் 

No comments: