Monday, January 3, 2011

thiyanamum aarokiya unavum

சுவாமியின் பொர்பாதங்களுக்கு  என் பணிவு நிறைந்த நமஸ்காரங்களை அற்பநித்துவிட்டு இக்கட்டுரையை தொடங்குகிறேன் 
 ஆரோக்கிய வாழ்விற்கு தியானமும் யோகாவும் உணவுப்பழக்கங்களும்  மிகவும் அவசியமானதாகும் 
 இதை எங்களுக்கு கற்றுக்கொடுத்த யோகா ஆசிரியையை  எங்களால் என்றைக்குமே மறக்க முடியாது. அவர்களைப்பற்றி எண்ணும்போதேமனதுக்கு மிகவும் இனிமையாகவும்  அதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. அவர் செல்வச்சிறப்பு மிக்க நல்ல குடும்பத்தில் பிறந்து அதே போன்று செல்வச்சிறப்பு மிக்க குடும்பத்தில் திருமணம்  செய்து கொண்டு முத்துப்போல் இரண்டு  குழந்தைகளைப்பெற்று இனிமையான  வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் அவர் மனம் திருப்தி  அடைய வில்லை.  எப்போதும் ஆன்மீகத்திலேயே சுழன்று கொண்டிருந்தது  எனவே பல யோகிகளையும்  மகான்களையும் சந்தித்து  அவர்களிடமிருந்து  ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம்மான  ஆன்மீக கருத்துக்களையும் உணவு முறைகளையும்  கற்றுக்கொண்டு  வந்தார். மேலும் பெரிய யோக மைய்யத்திற்கும் சென்று  யோகா பயின்று வந்தார்.  தான் கற்று வந்தவைகளை  மற்றவர்களுக்கும்  கற்றுக்கொடுக்கவேண்டும்  என்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். தாம்  கற்று வந்த நல்ல விஷயங்களை   பல மக்களுக்கும் போயச்சேர்க்கவேண்டும்
என்று அடிகடி கூறுவார்  எனவே ஒரு யோகா மைய்யத்தை  உருவாக்கி  பல மக்களுக்கு  யோகப்பயிற்சி. ஆண்மீககருத்துக்கள்  உணவு முறைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்.  அவர் நீண்டநாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து பல மக்களும் நன்மை பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தோம்.  ஆனால் எல்லாருக்கும் பிடித்த எங்கள் யோகா ஆசிரியையை இறைவனுக்கும் மிகவும் பிடித்துவிட்டது போலும்  தன வாழ்நாளின் இலட்சியமான கைலாச யாத்திரையின்  முடிவில் இறைவன் அவர்களை  தன்னிடம் அழைத்துக்கொண்டார். தம் இல்லத்திலிருந்து கைலாச யாத்திறைக்குப்புறப்பட்ட அவர் வீடு திரும்பாமலே கைலாசம் சென்றடைந்துவிட்டார்.  இதை அறிந்த எங்கள் எல்லாருடைய மனமும் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாகியது.  
தினமும் காலையில் யோகா செய்யும்போது  அவர்கள் எங்கள் எதிரில் அமர்ந்து யோகா சொல்லிக்கொடுத்த காட்சியே மனக்கண்முன் தோன்றி மனம் மிகவும் வேதனையில் வலிக்கிறது. இருப்பினும் ஆன்மீகச்சூழளிலேயே சொர்க்கம்  அடைத்த அந்த  உயர்ந்த ஆத்மாவிற்கு தினமும் அஞ்சலி  செலுத்துகிறோம் .
 அவர் மற்றபெண்களைப்போல   நகைகள் புடவைகள் முதலியவற்றில் அதிகம் ஆர்வம் காட்டமாட்டார்  எப்போதும் மிகவும் எளிமையாகவே உடை உடுத்துவார். நகைகளும் அதிகம் அணியமாட்டார்.  அவர் பேசும் பேச்சுக்கள் எப்போதும் யோகாவைப்பற்றியும்  தியானத்தைப்பற்றியுமே இருக்கும் 
 இவர் எல்லாரிடத்திலும் மிகவும் பாசத்துடன் பழகுவார் பேச்சும் மிகவும் பணிவாகவும் மென்மையாகவும் இருக்கும். எனக்கு வகுப்பு முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் அடிக்கடி கூறுவார்... நான் கர்ருக்கொண்டவைகளை  இன்னும் அதிக மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் 
இதனால் அதிக மக்கள் பயன் பெற வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். நான் அவர்களிடம் அறிந்த சில செய்திகளை மின்னஞ்சலில்  எழுதலாமா  என்றுகேட்டதற்கு  தாரளமாக எழுதுங்கள்  என்னுடைய நோக்கமே அதிகம்பேர்  பயனடைய வேண்டும் என்பதே என்று கூறுவார் நானும் நிறைய புத்தகங்களைப்படித்தும் மகான்களிடம் சென்றும  அறிந்த விஷ யன்களைப் பற்றித்தானே உங்களிடம் கூறுகிறேன்  என்று   கூறுவார்  நீங்கள் எழுதுவதி எனக்கு மிகவும் சந்தோஷம்  என்றும் கூறினார் . ஆனால் அவர் இருக்கும்போது  எழுதும் சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை  எனவே இக்கட்டுரையை  அந்த உயர்ந்த ஆன்மாவிற்கு kaanikk

No comments: