------------------------------
3 .பீட்ரூட் ஊறுகாய்
ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள்
பீட்ரூட் ----250 கிராம்
இஞ்சி ----100 கிராம்
எலுமிச்சை ௧௦
இந்துப்பு ----சிறிது
தயாரிப்பு :
பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி காரட் திருவியில் நைசாகச்ச்சீவ வேண்டும் ஈஞ்சியை தோல் சீவிவெட்டிசசாறு எடுக்கவும் மிகக்குறைந்த நீர் சேர்க்கலாம் எலுமிச்சையை கோட்டை நீக்கி சாறு எடுக்கவும் இஞ்சிசாறு,எலுமிச்சை சாறு இவைகளைக்கலந்து அவற்றில் சீவிய பீட் ரூட்டை பத்து நிமிடம் ஊறவைக்கவும் தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் சேர்க்கலாம். சுவையான பீட்ரூட் ஊறுகாய் சாப்பிட ரெடி இது அடுப்பில் சமைக்காத ருசியான ஊறுகாய். இயற்கை மருத்துவ முகாமில் அனைவரும் பிரியமாக சாப்பிடும் உணவு. மூன்றில் ஒரு பங்கு காரட் சேர்த்தும் இவ்வூருகாய் தயாரிக்கலாம்
பயன்கள் :
நீரிழிவு அன்பர்கள் உட்பட அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு.உயர் இரத்த அழுத்தம் .அமிலத்தன்மை மலச்சிக்கல், பசியின்மை ,தொப்பை குறைக்கும் உணவு ,ஜீரணக்கோளாறு வயிற்றுவலி வாயுப்போருமல் கொலஸ்ட்ரால்,குறைக்கும் உன்னத உணவு. பயமில்லாமல் தினமும் அளவாக சாப்பிடலாம்.
இயற்கை தயிர் அவள் சாதங்களுடன் இணைத்துச்சாப்பிடலாம் பீட்ரூட்டை ஜெர்மனியில் ஜூஸாக எல்லாரும் அடிக்கடி அருந்தும் பானமாக விற்பனை செய்கின்றனர் கான்சரை குணப்படுத்தும் உணவுகளில் பீட் ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தின் தன்மையை மேம்படுத்தும் குணம் பீட்ரூட்டிற்கு உள்ளது ஒரு சிலருக்கு இது செரிப்பதற்கு கொஞ்சம் கடினமாகவும் இருக்கும்
பீட்ரூட் 2000 வருடங்களுக்கு முன்னேயே உணவாக பயன் படுத்தப்படுகிறது .உடலின் தேவையற்ற இரத்த சூட்டை சரி செய்யும் உணவு .இதில் உள்ள பீட்டின்வயிறு குடல் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மையாக உள்ளன .இதி நல்ல சர்க்கரை சத்து உள்ளதால் உடலுக்கு உடனடி தெம்பு தரும். காரட்டுடன் பீட்ரூட்டையும் ஜோசுடன் கலந்து சாப்பிட்டு நோஞ்சான் அன்பர்கள் நல்ல புஷ்டி பெறலாம் இந்தியர்களை விட வெளிநாட்டினர் தை அதிக அளவில் பயன் படுத்தி பயன் பெறுகின்றனர் .உடல் எடை அதிகம் வேண்டியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு நல்ல வனப்பை பெறலாம் .மாலைக்கண் ,கண்ணாடி அணிந்த அன்பர்கள் தொடர்ந்து சாப்பிட்டு நலம் பெறலாம். கண் குளிர்ச்சியும் கிட்டும். நீடித்த உடல் உல் புண்களை ஆற்றும். மஞ்சள் காமாலை கண்டவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம். ஹீமொக்குலோபின் குறைந்தவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் கொடுக்கலாம். ஹீமொக்குலோபின் அளவை கூட்டும் அருமையான உணவு. முகப்பொழிவைவளமாக்கும் ஊறுகாய் பீட்ரூட் ஊறுகாய்.
சமைத்த ஊறுகாய் குடலை ஊரு படுத்தும்
இயற்கை ஊறுகாய் குடலை குணப்படுத்தும்
வளரும் .
No comments:
Post a Comment