-----------------------------
2. நெல்லிக்கனி சிப்ஸ் ,வற்றல்
தேவையான பொருட்கள் :
நாட்டு நெல்லிக்கனி -100
தயாரிப்பு முறை :
பொதுவாக நெல்லிக்கனி மழைக்காலங்களில் கிடைப்பதால் வெட்டி சமைத்து ஊறுகாய் போடுகிறோம் அதில் சத்துக்கள் அழிகின்றன. அதற்குப்பதில் சிப்ஸ் அல்லது வற்றல் செய்யலாம்.இம்முறையில் வருடம் முழுவதும் பயன் படுத்தலாம் சளித்தொல்லையும் இராது.
நன்றாக முற்றிய முழு நெல்லிக்கனிகளை கழுவிச் சிறு சிறு துண்டுகளாக சீவலாம். கொட்டை நீக்கி விடவும். பின் வெள்ளைத்துணியில் விரித்து நன்றாக வெய்யிலில் காய வைக்கவும் நன்றாக உலர்ந்தவுடன் கார்றுப்புகாமல் பத்திரப்படுத்தவும். இதுவே நெல்லி சிப்ஸ். உப்பு மிளகாய் ஏதும் சேர்க்கக் கூடாது. வேக வைக்கக்கூடாது. வெய்யிலில் காய வைப்பதால் நெல்லியின் விட்டமின் c குறையாத தன்மையில் உள்ளது.
பயன்கள்:
தேவையான போது ஒன்று இரண்டு வாயில் போட்டு சுவைத்துப்பின் தண்ணீர் குடிக்கலாம் மிகச்சுவையாக இருக்கும் இனிக்கும் சிறிது சிப்சை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து துவையல் செய்யலாம் இரவில் ஊறவைத்துகாலையில் நெல்லி பானமாகவும் குடிக்கலாம்
நீரிழிவு அன்பர்களின் அற்புதமான மருந்தும் உணவும் நெல்லி சிப்ஸ் எனலாம் பசியின்மையை ஒரே நாளில் நீக்கும் காபி,டி அன்பர்கள் பான்பராக்,புகையிலை ,சிகரட் அன்பர்கள் நெல்லியின் மூலம் நிவாரணம் பெறலாம் பயண காலங்களில் பயன் படுத்தலாம் கண்ணாடி அணிந்த அன்பர்கள் நெல்லியால் நல்ல பயன் பெறலாம். இளமை மேம்படும். மூட்டு வலி ,உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், தொப்பை அன்பர்கள் நெல்லி சிப்சின் மூலம் நல்ல நலம் பெறலாம். உடலின் அமிலத்தன்மை ,புளியேப்பம், வாயுப்போருமல் நீங்கி சிறுநீர் பிணிகள் விலகும். முடக்கு வாதம் மூல நோய் குறையும். பெண்களின் ஒரு ஒப்பற்ற மருந்து -மாதவிடாய் பிணிகள் நீங்கும். சர்வ ரோக நிவாரண உணவு.
முதியோரும் .நெல்லியும் முதலில் புளிப்பாக இருந்தாலும் பின்னாளில் வாழ்வை வளமாக்குவதில் இனிப்பாக இருக்கிறார்கள்.
நெல்லியை வெய்யிலில் உலர்த்தினாலும் அதில் உள்ள விட்டமின் குறைவதில்லை. அதில் லெனின் என்ற திரவம் உள்ளதால் விட்டமின் சிதையாமல் மேலும் கூடுகிறது. உடனடி சுத்தக்குடி நீர் தயாரிப்பில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு ஸ்பூன் நெல்லிப்போடி கலந்தால் நல்ல குடி நீர் உடனடியாக கிட்டும். தாது விருத்தத்துக்கும் ,தலை முடி டானிக்குக்கும் பயன்படுகிறது. இரவில் பயன் படுத்தக்கூடாது. நரம்புத்தளர்வு .காக்காய் வலிப்பு, உடல் மன நலக்குறைவு அன்பர்கள் தினமும் நெல்லி சிப்ஸ் அல்லது நெல்லி துவையல் சாப்பிட வேண்டும்.
பீடி, பான் பராக் அன்பர்கள் நெல்லி சிப்ஸ் ஆல் உறுதியாக மறு பிறவி எடுக்கலாம்.
valarum
No comments:
Post a Comment