Wednesday, January 12, 2011

thiyanamum arokiya unavum {6}

4.முள்ளங்கி  ஊறுகாய் :
ஐந்து நபர்களுக்கு ......... தேவையான பொருள்கள் 
வெள்ளை முள்ளங்கி ......300  கிராம் 
அல்லது சிவப்பு முள்ளங்கி300.கிராம் 
இஞ்சி ...................................100..கிராம் 
எலுமிச்சை .........................5
இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் ......சிறிது 
தயாரிப்பு முறை :
முள்ளங்கியை கழுவி காரட் திருகல் போல் சீவலாம் அல்லது தீக்குச்சி வடிவில் நறுக்கலாம் இஞ்சியைத்தோல் சீவி வெட்டிசசாறு எடுக்கவும்.எலுமிச்சையை கொட்டை நீக்கி சாறு எடுக்கவும். இஞ்சிச்சாறு  . எலுமிச்சை சாறு கலந்து அதில் நறுக்கிய முள்ளங்கியை பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும் தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக் சால்ட் கலக்கவும் தேவையெனில் மிளகுத்தூள் சேர்க்கலாம் 
பயன்கள்:
மலச்சிக்கல் தீரும். நீரிழிவு அன்பர்களும் அருமையாக சாப்பிடலாம். அடுப்பில் சமைக்காத எண்னை இல்லாத ஊறுகாய்.உயர் இரத்த அழுத்தம் ,அதிக கொலஸ்ட்ரால் அன்பர்களுக்கு அவசியமான ஊறுகாய். அஜீரணம், பசியின்மை அன்பர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். சிருநீறகப்பிணிகள் மறையும்.அதிக உடல் எடை அன்பர்கள் ,தொப்பை, வாயுப் பொருமலால் அவதிப்படும் அன்பர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும். 
இஞ்சி சாறுக்கு  பதில் தயிரில் ஊறவைத்தும் செய்யலாம். இ தேபோல் நெல்லி ஊறுகாய் .மாங்காய் ஊறுகாய் போன்றவைகளையும் அடுப்பில் சமைக்காமல் எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கலாம். 
எல்லா இயற்கை அவல சாதவகைகளுடன் சேர்த்துச்சாப்பிடலாம் 
முள்ளங்கி அதிக குளிர்ச்சி தரும் உணவு. சீதள உடல் அன்பர்கள் கவனமாக பயன் படுத்த வேண்டும். சிறுநீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உள்ள அன்பர்கள் நல்ல பயன் பெறலாம். குடல் நோய் ,பல்வலி, கரப்பான் நீங்கும். மூல வியாதி ,மூலக்கடுப்பு, மூல எரிச்சலை விரைந்து நீக்கும். ஜீரணம் மேம்படும். காய் கறிகளில் மலிவானது. எனினும் மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது, 
சமைத்த மசாலை ஊறுகாய் குடல் புண்ணை அதிகரிக்கும். 
முள்ளங்கி ஊறுகாய் சிறுநீர் எரிச்சலை தீர்த்திடும்.
சோடியம் குலோரைட்டுக்கு  மாற்று பொட்டாசியம். உப்பால் உடல் கொழுத்த அன்பர்களின் அருமையான உணவு வெள்ளரியே. *
வளரும் 

No comments: