Thursday, January 6, 2011

thiyanamum aarokiyaunavum

Book referred:
------------------
சமைக்காத சத்துள்ள உணவுகள் :
இயற்கை பிரியன் இரத்தின சக்திவேல் 
கற்பகம் புத்தகாலயம் 
4/2  சுந்தரம்  தெரு{நடேசன் பூங்கா அருகில் }
 தியாகராய நகர் ,சென்னை -600017  
தொலை பேசி -24314347   
1.பழக்கலவை 
புரூட் சாலட் -புரூட் மிக்ஸ் 
--------------------------------------
 5 நபர்களுக்கு  தேவையானபொருட்கள் 
ஆப்பிள் 
 வாழைப்பழம் 
திராட்சை 
பேரீச்சை 
மாம்பழம் 
பப்பாளி 
சப்போட்டா 
ஆரஞ்சு 
மாதுளை 
 கொய்யா 
 வகைக்கு 100 கிராம் அளவில் 
தேன்  அல்லது வெல்லம்  --100 முதல் 200 கிராம் 
முந்திரி   -50   கிராம் ... ஏலக்காய்  தூள்  சிறிது  த்தேவையானால்  1/2   மூடி தேங்காய் திருகல் 
தயாரிப்பு முறை 
 ஆப்பிள் ,திராட்சை , கொய்யா , பேரீச்சை  மாம்பழம் , சப்போட்டா  போன்றவைகளை  தோல் நீக்கத்தேவையில்லை. நன்றாக கழுவி  சிறு சிறு துண்டுகளாக வெட்டி  கொட்டைகளை நீக்கவும்  மாதுளை முத்துக்களை மட்டும் எடுக்கவும்  வாழைப்பழத்தை  தோல் நீக்கி  சிறு துண்டுகளாக வெட்டவும்  ஆரஞ்சை தோல் நீக்கி  சுளைகளை உரிக்கவும்  பப்பாளியையும் தோல் சீவி  விதை நீக்கி  சிறு துன்ன்டுகளாக வெட்டி விட்டவும் 
வெட்டியா எல்லா பழங்களையும்  கலந்து  அத்துடன் தேன்  அல்லது வெல்லம் தூள் முந்திரி,ஏலக்காய் தூள் தேங்காய் திருகல்  கலந்தால் பழக்கலவை சாப்பிடத்தயார்.
பயன்கள்
ஆஸ்துமா,சளித்தொல்லை அன்பர்கள் அளவாகசாப்பிடலாம் 
நீரிழிவு அன்பர்கள் தவிர  அனைத்து அன்பர்களும் சாப்பிடலாம். உணவுக்கு முன் சாப்பிடலாம். தரித்தவுடன் சாப்பிட வேண்டும்  இரு வேளையில் மலச்சிக்கல் .குடல் புண் பசியின்மை விலகும் உடலுக்கு உடனடி சக்தி தரும்  சிறுநீர் எரிச்சல்  நீர் பிரியாமை  உடலின் மூலச்சூடு  தொப்பை ஒரு வாரத்தில் சரியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிரியமாக சாப்பிடும் உணவு.  பழக்கலவையை தொடர்ந்து சாப்பிட கண்பார்வை மேம்படும் மூட்டு வலி உடல் தொப்பை வாயுப்போருமல் விலகும். 

0 comments: