மனதிற்கு மருந்தாகும் மலர்ந்த மலர்கள் தந்திடும் தேன் நமது உடலுக்கு நல்ல மருந்தாகும்.
ஐந்து நபர்களுக்கு ....தேவையான பொருட்கள் :
பெரிய முழு நெல்லி .....50
தேன் .............................1.50..கிலோ
பனங் கற்கண்டு .........500 கிராம்
செய்முறை:-
பெரிய முழு நெல்லியை கழுவிவிடவும். பின் நல்ல துருப்பிடிக்காத ஊசியால் நெல்லயில் சிறு சிறு துளைகளை நெல்லி முழுவதும் செய்து கண்ணாடிப்பாட்டிலில் தேனை ஊற்றி அதில் துளையிட்ட நெல்லிகளை ஊறவிடவும். கண்ணாடி பாட்டிலின் மேல் பகுதியில் மெல்லிய பருத்தி துணியை கட்டி வெய்யிலில் ஒரு வாரம் வரை புடம் போடலாம். சிலர் நெல்லிகளை முதலில் ஆவியில் காட்டியபின் ஊசியால் நெல்லிகளைக்குத்தி பின் அதை தேனில் ஊறவிடுவர். நன்றாகத்தேனில் ஊறினால் இதுவே மிகவும் சத்து மிகுந்த நெல்லி ஜாமூன்-கோலாஜாமூன் எனப்படும்.மிகச்சிறந்த உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட விரும்புவர் விசேஷ வைபவங்களில் விருந்தினர் விருந்தோம்பலில் வழங்கி அன்பர்களை அசத்தி விடலாம். ஆரோக்கியத்தின் அஸ்திவார உணவு.
பயன்கள்:
நெல்லி சிப்சின் பலன்கள் அனைத்தும் கிட்டும். நீரிழிவு ,கிளைக்கோமா அன்பர்களும் தொடர்ந்து சாப்பிட பயன் பெறுவார். . டயரியா விலகும் , டிசன்ட்ரிவயிற்றுவலி ஜீரணமின்மைசக்தியின்மை மறையும். தினம் சாப்பிட்டால் அண்ணன் தம்பியாகும் அளவில் முதுமை மறைந்து இளமை ஊஞ்சலாடும் உயர் இரத்த அழுத்தம் ,ஒபெசிட்டி அதிக கொலஸ்ட்ரால் அதிக எடை குறையும் பசிடின்மை நீங்கி சாப்பிடும் உணவுச்சத்துக்கள் உடலில் கிரகிக்கப்பட்டு பலம் மிகும் தாது விருத்தியாகும். சளி, இருமல். தலை வலி விலகி கண்பார்வை மேம்படும். கண்ணிற்கு கண்ணாடி அணிந்த அன்பர்கள் தினமும் அவசியம் சாப்பிட வேண்டும். குழந்தை பாக்கியம் வேண்டிய அன்பர்கள் தினமும் நெல்லி ஜாமூன் சாப்பிட்டு குழந்தை பெறலாம்.
தினம் ஒரு நெல்லி ஜாமூனால் அண்ணன் தம்பியாகி அழகு இளமை பெற்றிடலாம்.
குறிப்பு:
முளைத்த உளுந்து நோஞ்சானை பலசாலியாக்கும்.கர்ப்பப்பை கோளாறு கல்லீரல் பிணிகள் விரட்டும்.
வளரும்.
No comments:
Post a Comment