Monday, August 20, 2012

arumyyaanasamaiyal kurippukal...2

கிருஷ்ணஜியுடன் நாற்பதாண்டுகள் ........என்ற புத்தகத்திலிருந்து ..

பாலடைப்ப்ரதமன் /;
பாலடப்பிரதமன் இரண்டு வகை ஒன்று அடை பிரதமன் ,தேங்காய்ப்பால் வெல்லம் போட்டு செய்வது ..மற்றொன்று பசும்பால், சர்க்கரைபோட்டு பால் பாயசம் போல் செய்வார்கள் அரிசியில் அடை தயாரித்து செய்வார்கள் இந்த அடை தயாரிக்கும் முறைதான் முக்கியம் .அடைபிரதமனுக்கு அடை தயாரிக்க நல்ல பச்சரிசி ஒரு கிலோ ஊறவைத்து வடிகட்டி உலர வைத்து நைசாக  மாவாக்க வேண்டும் இந்த மாவுக்கு ஒரு கப் மாவு தண்ணீர் மூன்று கப் ஒரு ஸ்பூன் நெய் என்று கலந்து வைத்துக்கொள்ளவேண்டும் வாழை இலையை டிபன் இலை போல சிறிதாக அறிந்து கொண்டு தயார் செய்யவும். இட்லிப்பாத்திரத்தில்  நீர் விட்டு கொதி வந்ததும் வாழை இலையில் இலை வடகம் போல் நைசாக எழுதி பாய் போல் சுற்றிக்கொள்க இட்லிதட்டில் ஒவ்வொன்றாக வைக்கவும் மூடி வைத்து பத்து நிமிடம் வேகவிடவும் பிறகு இறக்கி இலையில் இருக்கும் அடையைஒரு பாத்திரத்தில் மாற்றி நைசாக வில்லையாக வெட்டிக்கொள்ளவும் பாலடைப்பிரதமனுக்கு இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டராக  சுண்ட வைக்கவும் சுண்டி வந்ததும் 250  கிராம் சர்க்கரை போட்டு கொதி வந்ததும் பாலின் அளவிற்கு கால் பாகம் கணக்காக வெட்டி வைத்திருக்கும் அடையையும் போட்டு ஐந்து  நிமிடம் கொதிக்கவிடவும் ஏலப்பொடி ஒரு ஸ்பூன் போட்டு இறக்கவும் பால் மணத்துடன் வரும் இது பாசந்தியை நினைவு படுத்தும் 
அடுத்து வரும் நாட்களில் வேறு ஒரு குறிப்பை பார்க்கலாம் 

1 comment:

Mag said...

We will try this